மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேர் கைது


மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 18 Aug 2021 4:56 AM IST (Updated: 18 Aug 2021 4:56 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலூர், 
மேலூர் மற்றும் சுற்றியுள்ள நரசிங்கம்பட்டி, மலைநகர், தெற்குதெரு, ஆட்டுக்குளம் உள்பட பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடுபோயின. இதையடுத்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் திருடர்களை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தினார். மேலூர் அரசு கலை கல்லூரி அருகே மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் கமலமுத்து, குற்றப்பிரிவு போலீசார் முருகேசன், திருஞானம், அரபகமது, சுந்தர் ஆகியோர் வாகன சோதனை நடத்தினர்.  அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 வாலிபர்களிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பிடிபட்டவர்கள் கொடிக்குளத்தை சேர்ந்த அக்கினி (வயது21), மேலூரை சேர்ந்த பால்பாண்டி (19) ஹரீஷ் (18) மற்றொரு 17 வயது சிறுவன் என்பதும் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது.  அதன்பின்னர் அந்த 4 பேரையும் கைது செய்து பல்வேறு இடங்களில் திருடிய 10 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story