ஈரோடு அருகே சென்னிமலை ரோட்டில் பல மாதங்களாக காணப்படும் குழி


ஈரோடு அருகே சென்னிமலை ரோட்டில் பல மாதங்களாக காணப்படும் குழி
x
தினத்தந்தி 18 Aug 2021 8:32 PM IST (Updated: 18 Aug 2021 8:32 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு-சென்னிமலை ரோட்டின் குறுக்கே தோண்டப்பட்டு் பல மாதங்களாக குழி சரிசெய்யப்படாமல் கிடக்கிறது. விபத்துகளை தடுக்க உடனே குழியை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு-சென்னிமலை ரோட்டின் குறுக்கே தோண்டப்பட்டு் பல மாதங்களாக குழி சரிசெய்யப்படாமல் கிடக்கிறது. விபத்துகளை தடுக்க உடனே குழியை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கால்வாய் போன்ற குழி
ஈரோட்டில் இருந்து சென்னிமலை செல்லும் ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அதேபோல் சென்னிமலையில் இருந்து ஈரோடு நோக்கியும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த ரோட்டில் காசிபாளையம் ஐ.டி.ஐ. பகுதியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே பல மாதங்களுக்கு முன்பு ரோட்டின் குறுக்கே கால்வாய் போன்று குழி தோண்டப்பட்டது. ஆனால் எதற்காக அந்த குழியை தோண்டினார்கள் என்று தெரியவில்லை. பணி முடிந்ததும் சரிசெய்யாமல் அப்படியே விட்டு்விட்டார்கள்.
சரிசெய்ய கோரிக்கை
இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் அந்த வழியாக செல்பவர்களுக்கு குழி இருப்பது சரியாக தெரிவதில்லை. குழியின் அருகில் செல்லும்போது தான் குழி இருப்பதை கவனித்து திடீரென பிரேக் போடுகின்றனர். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் அந்த வாகனங்களுடன் மோதி அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
மேலும் ஒரு சிலர் குழியை தெரியாமல் கடந்து செல்லும்போது வாகனங்களின் டயர்களையும் பதம் பார்த்து விடுகிறது. எனவே நெடுஞ்சாலை துறையினர் ரோட்டின் குறுக்கே கால்வாய் போன்று காணப்படும் குழியை உடனடியாக மூடி சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
1 More update

Related Tags :
Next Story