குட்டிகளுடன் ரோட்டோரம் உலா வந்த யானைகள்


குட்டிகளுடன் ரோட்டோரம்  உலா வந்த யானைகள்
x
தினத்தந்தி 18 Aug 2021 8:43 PM IST (Updated: 18 Aug 2021 8:43 PM IST)
t-max-icont-min-icon

கடம்பூர் அருகே குட்டிகளுடன் ரோட்டோரம் யானைகள் உலா வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடம்பூர் அருகே குட்டிகளுடன் ரோட்டோரம் யானைகள் உலா வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யானைகள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், டி.என்.பாளையம், கடம்பூர், விளாமுண்டி, ஜீரகள்ளி, ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, கரடி, புலி, சிறுத்தை, காட்டெருமை, கழுதைப்புலி, மான்  உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
வனப்பகுதியில் இருந்து யானை, மான், சிறுத்தை போன்ற விலங்குகள் தண்ணீர், உணவு தேடி அடிக்கடி வனச்சாலையை கடந்து செல்வது வழக்கம். குறிப்பாக யானைகள் அடிக்கடி  குட்டிகளுடன் ரோட்டை கடக்கின்றன.
ரோட்டை கடந்தன
அதேபோல் நேற்று மாலை கடம்பூர் வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் யானைகள் உலா வந்தன. பின்னர் கடம்பூர்-குன்றி ரோட்டை யானைகள் குட்டிகளுடன் கடந்து சென்றன. பின்னர் ரோட்டு ஓரம் நின்றுகொண்டு இருந்தன. 
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘வனப்பகுதியில் இருந்து யானை, உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி வெளியேறி சாலையை கடந்து செல்கின்றன. எனவே அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அதிக ஒலி எழுப்பக்கூடாது. வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும். செல்போனில் புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்யக்கூடாது’ என்றனர்.

Next Story