ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிப்பு


ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிப்பு
x
தினத்தந்தி 18 Aug 2021 10:47 PM IST (Updated: 18 Aug 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிப்பு

சத்தியமங்கலம், பவானிசாகர், புளியம்பட்டி, தாளவாடி, ஆசனூர் ஆகிய போலீஸ் நிலையங்களில், அந்தந்த பகுதிகளில் சட்டவிரோதமாக விற்ற மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் என மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்தன. 
மேலும் இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டு் இருந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அழிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் மதுபாட்டில்கள் அனைத்தும் சத்தியமங்கலம் அத்தாணி ரோட்டில் உள்ள நகராட்சி உரக்கிடங்குக்கு கொண்டு் செல்லப்பட்டன. அங்கு கோட்ட கலால் தாசில்தார் சீலா முன்னிலையில் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில், பொக்லைன் எந்திரம் மூலம் குழி வெட்டி அதில் மதுபாட்டில்கள் போடப்பட்டன. பின்னர் பொக்லைன் எந்திரம் ஏற்றி அனைத்து பாட்டில்களும் உடைக்கப்பட்டு் மூடப்பட்டது.
1 More update

Next Story