மொடக்குறிச்சி அருகே மரவள்ளிக்கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த டிரோன் மூலம் மருந்து அடிக்கும் பணி


மொடக்குறிச்சி அருகே மரவள்ளிக்கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த டிரோன் மூலம் மருந்து அடிக்கும் பணி
x
தினத்தந்தி 19 Aug 2021 1:53 AM IST (Updated: 19 Aug 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

மொடக்குறிச்சி அருகே மரவள்ளிக்கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த டிரோன் மூலம் மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மொடக்குறிச்சி அருகே மரவள்ளிக்கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த டிரோன் மூலம் மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மாவுப்பூச்சி தாக்குதல்
மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூர் கிராமம் படிப்பாறை தொட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. 
விவசாயியான இவர் அப்பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டு்ள்ளார். 
மொத்தம் 7 மாதங்கள் ஆன இந்த பயிர் தற்போது சுமார் 5 அடி உயர அளவுக்கு வளர்ந்துள்ளது.
இந்த நிலையில் மரவள்ளிக்கிழங்கு பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் தென்பட்டது. இதைத்தொடர்ந்து பூபதி சாதாரண தெளிப்பான் மூலம் மரவள்ளிக்கிழங்கு பயிருக்கு மருந்தடித்துள்ளார். ஆனால் சரியான பலன் கிட்டவில்லை. 5 அடி உயர அளவுக்கு மரவள்ளிக்கிழங்கு வளர்ந்திருந்ததால் மருந்தடிக்க அவரால் இயலவில்லை.
டிரோன் மூலம் மருந்து
இந்த நிலையில் டிரோன் மூலம் மருந்து தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை அறிந்தார். இதைத்தொடர்ந்து சோழசிராமணி பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் டிரோன் மூலம் பூபதியின் மரவள்ளிக்கிழங்கு பயிருக்கு மருந்து அடித்து வருகிறார்கள்.
இதுகுறித்து விவசாயி பூபதி கூறும்போது, ‘மரவள்ளிக்கிழங்கு சுமார் 5 அடி உயரம் வரை வளரக்கூடியது. இந்த பயிருக்கு வழக்கமான பவர் ஸ்பிரேயர் மற்றும் இதர மருந்தடிக்கும் கருவிகளால் அடித்தால் முழுமையாக பலன் கிடைக்காது. 
எனவே டிரோன் மூலம் மேலிருந்து பயிருக்கு தெளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை அறிந்தேன். மேலும் அதன் மூலம் செலவும் குறைவு, நல்ல பலன் கிடைக்கும் என்று தெரிந்ததால் இப்பணியை மேற்கொண்டேன்’ என்றார்.

Next Story