காஞ்சீபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு


காஞ்சீபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 19 Aug 2021 5:50 PM IST (Updated: 19 Aug 2021 5:50 PM IST)
t-max-icont-min-icon

கரசங்கால் ஊராட்சியில் காஞ்சீபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

படப்பை, 

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள கரசங்கால் ஊராட்சியை பசுமை கிராமாக மாற்றுவதற்கு ஊராட்சியில் உள்ள அனைத்து பகுதியையும் காஞ்சீபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து ஊராட்சியில் கழிவறை இல்லாத வீடுகளுக்கு கழிவறை வசதி ஏற்படுத்தி தரவும் குடிநீர், மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ள தன்னிறைவு பெற்ற கிராமமாக முன்னேற்ற அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆய்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிமாறன், (சத்துணவு) வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், முத்துக்குமார், உதவி பொறியாளர் சுப்புராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன், படப்பை ஊராட்சி செயலர் முகமது ஆரிப் ஆகியோர் உடன் இருந்தனர். ஆய்வை தொடர்ந்து கரசங்கால் பகுதியிலுள்ள நாற்றங்கால் பண்ணையை பார்வையிட்டு எத்தனை வகை மரம், செடிகள், உள்ளன என பதிவேட்டை பார்த்து இவையெல்லாம் முறையாக பராமரிக்கப்படுகிறதா என கேட்டறிந்தார். 

மேலும் நாற்றங்காலில் செடிகளின் உற்பத்தி எண்ணிக்கை அதிகரிக்கவும் காய்ந்த நிலையில் உள்ள செடிகளை மாற்றி புதிய செடிகள் அமைக்கவும், நாற்றங்கால் பகுதியில் காலியாக உள்ள இடங்களில் பழ வகையை சேர்ந்த மரங்களையும், கீரை வகைகளையும் நட்டு வருவாய் ஈட்டுவதற்கான வழிமுறைகள் குறித்தும் அதிகாரிகளிடம் திட்ட இயக்குனர் தெரிவித்தார்.

Next Story