மின்சாரம் பாய்ந்து குரங்கு பலி
கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் மின்சாரம் பாய்ந்து குரங்கு ஒன்றி பலியானது.
கொடைக்கானல்:
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான குரங்குகள், காட்டெருமைகள், யானைகள் உள்ளன. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா இடங்கள் மூடப்பட்டுள்ளதால் குரங்குகள் உணவு கிடைக்காமல் தவிக்கிறது. தற்போது குரங்குகள் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி நகர் பகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றன.
குறிப்பாக வனப்பகுதியை ஒட்டியுள்ள அப்சர்வேட்டரி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு கூட்டம், கூட்டமாக குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று பகலில் குடியிருப்பு பகுதியில் புகுந்த குரங்கு மீது மின்சார வயர் உரசியதில் மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர், அந்த குரங்கின் உடலை எடுத்து சென்று வனப்பகுதியில் புதைத்தனர். எனவே அப்சர்வேட்டரி பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story