வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் சிவக்குமார் (வயது 24). அதே பகுதியில் உள்ள ராஜீவ்காந்திநகரில் வசித்து வருபவர் முருகராஜின் மகன் அழகுராஜா (23).நேற்று முன்தினம் மாலையில் சிவகுமார், அழகுராஜா ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் திருப்பரங்குன்றம் ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென்று நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் சிவக்குமார், அழகுராஜாவை மீட்டுமதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சிவகுமார் பரிதாபமாக இறந்து போனார். அழகுராஜா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
Related Tags :
Next Story