வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Aug 2021 11:55 PM IST (Updated: 19 Aug 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை, 
இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் மதுரை கீழ ஆவணி மூல வீதியில் உள்ள மண்டல அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு துணைப் பொதுச் செயலாளர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் அரவிந்த், சங்க ஆலோசகர் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் ஆர்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் சிவ சாரதாதேவி, வெங்க டேஷ், பிரபாகர், அகில இந்திய சம்மேளன உறுப்பினர் ராஜேஷ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Next Story