ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 147 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 147 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 10 ஆயிரத்து 265 பேருக்கு பரிசோதனை செய்ததில், 156 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 147 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 96 ஆயிரத்து 868 ஆக உயர்ந்தது. எனினும் கோவை மற்றும் சென்னைக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பில் ஈரோடு மாவட்டம் 3-ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 163 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 94 ஆயிரத்து 406 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 642 பேர் பலியாகி உள்ள நிலையில், தற்போது தொற்று உள்ள 1,820 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story