சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,995-க்கு ஏலம்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,995-க்கு ஏலம்
x
தினத்தந்தி 19 Aug 2021 9:39 PM GMT (Updated: 19 Aug 2021 9:39 PM GMT)

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,995-க்கு ஏலம் போனது.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று நடந்த பூக்கள் ஏலத்துக்கு ஏராளமான விவசாயிகள் 5 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 
இதில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1,995-க்கும், முல்லை ரூ.700-க்கும், காக்கடா ரூ.725-க்கும், செண்டுமல்லி ரூ.110-க்கும், பட்டுப்பூ ரூ.145-க்கும், ஜாதிமல்லி ரூ.900-க்கும், கனகாம்பரம் ரூ.1,150-க்கும், சம்பங்கி ரூ.280-க்கும், அரளி ரூ.260-க்கும், துளசி ரூ.60-க்கும், செவ்வந்தி ரூ.220-க்கும் ஏலம் போனது. நேற்று முன்தினம் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1,015-க்கும், முல்லை ரூ.720-க்கும், காக்கடா ரூ.775-க்கும், செண்டுமல்லி ரூ.165-க்கும், பட்டுப்பூ ரூ.240-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.1,305-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், அரளி ரூ.280-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.980-ம், ஜாதிமல்லி ரூ.400-ம், சம்பங்கி ரூ.80-ம், செவ்வந்தி ரூ.20-ம் விலை உயர்ந்து ஏலம் போனது.

Next Story