காஞ்சீபுரத்தில் கோவில் குளத்தில் மிதக்கும் கல் கண்டெடுப்பு
காஞ்சீபுரத்தில் உள்ள கோவில் குளத்தில் இருந்து மிதக்கும் கல் கண்டெடுக்கப்பட்டது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் ஒக்கப்பிறந்தான் கோவில் குளத்தில் இருந்து மிதக்கும் தன்மை கொண்ட கல் ஒன்று கிடைக்கப்பெற்றது.
இது குறித்து காஞ்சீபுரம் பல்லவர்மேட்டை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி கூறியதாவது:-
எனது தங்கை மகன் கல் ஒன்றை ஆணியால் செதுக்கி கொண்டிருந்தான். அவனிடம் என்ன செய்கிறாய் என்று கேட்டேன். ஒக்கப்பிறந்தான் கோவில் குளத்தில் கல் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. அந்த கல்லில் சிவலிங்கம் செய்கிறேன் என்றான். பின்னர் அந்த கல்லை எங்கள் வீட்டு தண்ணீர் தொட்டியில் போட்டேன். அது மூழ்காமல் மிதந்தது.
இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள், தண்ணீரில் மிதக்கும் கல்லை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
ராமாயணத்தில் பாலம் அமைக்க பயன்படுத்தப்பட்ட கல் தண்ணீரில் மூழ்காமல் மிதந்தது என்று கேள்விப்பட்டுள்ளேன். இந்த கல்லும் அதுபோன்ற கல்லாக இருக்கும் என்பதால் காஞ்சீபுரத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தண்ணீரில் மிதக்கும் கல் குறித்து, காஞ்சீபுரம் அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் உமாசங்கர் கூறியதாவது:-
இது பவளப்பாறை வகையை சேர்ந்தது. இந்த வகை பாறைகள் கடலில் மட்டுமே காணப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் காணப்படுகிறது. அரிதாக காணப்படும் இந்த வகை பவளப்பாறைகளை யாராவது கொண்டு வந்து காஞ்சீபுரம் கோவில் குளத்தில் போட்டிருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story