வெள்ளோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9½ பவுன் நகை திருட்டு


வெள்ளோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9½ பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 20 Aug 2021 10:33 PM IST (Updated: 20 Aug 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9½ பவுன் நகை திருடப்பட்டது.

சென்னிமலையை அடுத்த வெள்ளோடு அருகே உள்ள கொத்துமுட்டிபாளையம் பறையன்காட்டுதோட்டத்தில் வசித்து வருபவர் முருகேசன் (வயது 52). விவசாயி. அவருடைய மனைவி கலைச்செல்வி (44).
சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு 2 பேரும் 1 கி.மீ. தொலைவில் உள்ள தங்களது தோட்டத்துக்கு சென்று விட்டனர். மாலையில் 2 பேரும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்திருந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 7½ பவுன் தங்க தாலி, 2 பவுன் தங்க சங்கிலி, 3 ஜோடி வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை காணவில்லை. வீட்டு கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவையும் உடைத்து அதில் இருந்த 9½ பவுன் நகையையும், 3 ஜோடி வெள்ளிக்கொலுசுவையும் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து முருகேசன் வெள்ளோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story