குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 20 Aug 2021 10:45 PM IST (Updated: 20 Aug 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 2 ஆயிரத்து 498 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும்.

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 2 ஆயிரத்து 498 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும்.
தண்ணீர் திறப்பு
டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் கிராமத்தை ஒட்டி வனப்பகுதியில் அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 42 அடி ஆகும். தற்போது அணையின் நீர்மட்டம் 41 அடியாக உள்ளது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
அதைத்தொடர்ந்து நேற்று காலை அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடந்தது. உதவி செயற்பொறியாளர் கல்பனா திருகானை திருகி தண்ணீரை திறந்து வைத்தார். அணையில் இருந்து வலது கரையில் 9 கன அடி, இடது  கரையில் 19 கன அடி என மொத்தம் 28 கன அடி நீர் வாய்க்கால் மூலம் புன்செய் பாசனத்துக்கு திறக்கப்பட்டது.
2,498 ஏக்கர் பாசனம்
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘இன்று (அதாவது நேற்று) முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை மொத்தம் 55 நாட்களில் 40 நாட்களுக்கு பாசனத்துக்கு 5 நாட்கள் இடைவெளி விட்டு தண்ணீர் திறந்து விடப்படும். இதனால், கொங்கர்பாளையம், கவுண்டம்பாளையம், வாணிப்புத்தூர், அரக்கன்கோட்டை  மற்றும் புஞ்சைதுறையம்பாளையம்,   ஆகிய கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 498 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்’ என்றனர்.
1 More update

Next Story