டிப்பர் லாரி மோதியதில் 2 பேர் பலி


டிப்பர் லாரி மோதியதில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 21 Aug 2021 1:30 AM IST (Updated: 21 Aug 2021 1:31 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில் 2 பேர் பலியானார்கள்.

மதுரை

மதுரையில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில் 2 பேர் பலியானார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

டிப்பர் லாரி மோதியது

மதுரை கீழவைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தூரபாண்டி (வயது 23). இவரது நண்பர் ஜெகநாதன் (20). சம்பவத்தன்று இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஆனையூர் பகுதிக்கு சென்றனர்.
 அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த செந்தூரபாண்டி பரிதாபமாக இறந்தார்.

போலீஸ் விசாரணை

பின்னால் அமர்ந்திருந்த ஜெகநாதன் படுகாயம் அடைந்தார். உடனே அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவரும் சிறிது நேரத்திலேயே இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story