மதுரை,
மதுரை கரிசல்குளம், ருக்குமணி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் மணிமேகலை (வயது 46). இவரிடம் ஆன்லைன் மூலம் தொழில் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று நெல்பேட்டையை சேர்ந்த ஜெலானி, புர்கான், ஷகிலாபானு, திருச்சி ஷாஜகான் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அவரும் அதை நம்பி அந்த தொழிலில் ரூ.37½ லட்சம் முதலீடு செய்தார். அதில் லாபத்தில் பங்காக மணிமேகலைக்கு சுமார் ரூ.5 லட்சத்து 93 ஆயிரம் கிடைத்ததாக கூறப்படுகிறது. மீதி பணத்தை கேட்ட போது அவர்கள் சரியான பதில் தெரிவிக்கவில்லை. மேலும் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் தன்னிடம் ரூ.32 லட்சம் மோசடி செய்ததாக மணிமேகலை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பெண்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.