அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் அருகே உள்ள கள்வேலிபட்டியை சேர்ந்தவர் அன்பரசு. இவருடைய மகள் ஆர்த்தி (வயது 18). இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டபடிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 12-ந் தேதி விஷத்தை சாப்பிட்டு விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.