திருமங்கலம்,
திருமங்கலத்தை சேர்ந்தவர் கொண்டன். இவருடைய மனைவி கோவிந்தம்மாள் (வயது 55). இவர் தனது மகன் முத்துபாண்டி உடன் மோட்டார் சைக்கிளில் திடியன் மேட்டுப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற கொண்டிருந்தார். அப்போது திடியன் அருகே சென்ற போது எதிரே மாட்டுத்தீவனம் ஏற்றி வந்த மின்வேன், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் கோவிந்தம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த சிந்துபட்டி ேபாலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.