ஓடும் பஸ்சில் கட்டையால் அடித்து கண்டக்டர் கொலை
மதுரை அருகே ஓடும் பஸ்சில் அரசு பஸ் கண்டக்டர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
மதுரை
மதுரை அருகே ஓடும் பஸ்சில் அரசு பஸ் கண்டக்டர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
பஸ் கண்டக்டர்
மதுரை மாவட்டம் மேலூர் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் செல்லச்சாமி (வயது 45). மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகர பஸ்சில் செல்லச்சாமி நேற்று மாலை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திருப்புவனம் பஜார் பகுதியில் பஸ்சில் ஏறிய சிலர், அவரை உருட்டுக்கட்டையால் தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அவரை, டிரைவர் மற்றும் பஸ்சில் இருந்தவர்கள் மீட்டு திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்த அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது அவர் வரும் வழியிலேயே இறந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
விசாரணை
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சொத்துப் பிரச்சினை காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என தெரியவருகிறது. மேலும் செல்லச்சாமியின் உறவினர்கள் அவரை தாக்கி கொலை செய்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் அவரது உறவினர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story