மலைப்பகுதி குகையில் தொன்மையான ஓவியங்கள்


மலைப்பகுதி குகையில் தொன்மையான ஓவியங்கள்
x
தினத்தந்தி 22 Aug 2021 2:00 AM IST (Updated: 22 Aug 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

மலைப்பகுதி குகையில் தொன்மையான ஓவியங்கள்

உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது வகுரணி மொட்டமலை. இந்த மலைப்பகுதியில் உள்ள புலிப்புடவு குகையில் சுமார் 3 ஆயிரம் ஆண்டு தொன்மையான பாறை ஓவியங்களை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இங்கு சிவப்பு நிறத்தில் புலி உருவமும், அபூர்வமாக கிடைக்கும் பெண் ஓவியங்கள் மற்றும் புள்ளிகளிலான மனித ஓவியம், குறியீடுகளாலான பல்வேறு ஓவியங்கள் இந்த குகையில் வரையப்பட்டுள்ளன. இந்த குறியீடுகள் தமிழி எழுத்துகளுக்கு முற்பட்ட எழுத்து வடிவமான குறியீடுகளாக இருக்கலாம் எனவும், சுமார் 3000 ஆண்டுகள் பழமையான குறியீடுகளாக இருக்க வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தெரிவித்தார். மேலும் உசிலம்பட்டி பகுதியில் பல்வேறு வகையான புலிக்குத்திக் கல், பாறை ஓவியங்கள் மற்றும் தமிழி எழுத்துக்கள் நிறைந்த கல்வெட்டுகள் மற்றும் இரும்பு உலை என கீழடிக்கு இணையான தொல்லியல் எச்சங்கள் கிடைத்து வரும் சூழலில் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விரிவான அகழாய்வு மேறகொண்டால் பல்வேறு தொல்லியல் வரலாறுகளை மீட்டெடுக்கலாம் என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Next Story