சோழிங்கநல்லூரில் லாரி திருடிய 2 பேர் கைது


சோழிங்கநல்லூரில் லாரி திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Aug 2021 7:41 PM IST (Updated: 22 Aug 2021 7:41 PM IST)
t-max-icont-min-icon

சோழிங்கநல்லூரில் லாரி திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சோழிங்கநல்லூர்,

சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் பரசுராமன். கழிவுநீர் லாரி வைத்துள்ளார். கடந்த 9-ந்தேதி எழுந்து பார்த்தபோது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இவரது லாரியை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அவர் செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கழிவுநீர் லாரியை இயக்கி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து துரைப்பாக்கம் உதவி ஆணையர் ரவி உத்தரவின்பேரில் செம்மஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஸ்பாபு மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த லாரி திருப்பூர் மாவட்டம் சரலக்காடு கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் நிறுத்தி வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். லாரியின் முன்பகுதியில் புதிதாக பெயிண்டு அடிக்கப்பட்டு் வாகன பதிவு எண்ணையும் மாற்றியதும் தெரியவந்தது. 

லாரியை திருடியதாக திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வேணுகோபால் (வயது 55), அவருடைய தம்பி மகன் தினேஷ்குமார் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவர் மீதும் பண்ருட்டியில் 7 லாரிகள் திருடிய வழக்கும், தாம்பரத்தில் ஒரு லாரி திருடிய வழக்கும், இருசக்கர வாகனங்கள் திருடிய வழக்கும், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதியில் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து லாரி மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது.

Next Story