கஞ்சா கடத்திய 3 பேர் பிடிபட்டனர்


கஞ்சா கடத்திய 3 பேர் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 23 Aug 2021 1:48 AM IST (Updated: 23 Aug 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா கடத்திய 3 பேர் பிடிபட்டனர்

திருமங்கலம், 
சிந்துபட்டி போலீசார் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தினர். ஆட்டோவில் வந்த நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்த கண்ணன் (வயது24), விருமாண்டி (25), பிரகாஷ் (25) ஆகிய 3 பேரும் ஆட்டோவில் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்து சிந்துபட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story