கொரோனா தடுப்பூசி முகாம்
கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
சோழவந்தான்,
சோழவந்தான் காமராஜர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வைகை இருசக்கரவாகனம் மற்றும் மெக்கானிக்குகள் பொதுநலசங்கம் சார்பாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சங்கத்தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தரமூர்த்தி, பொரு ளாளர் சிவஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ்பாண்டியன் முகாமை தொடங்கிவைத்தார், டாக்டர்கள் கிஷோ மகேஷ், செல்வி ஆகியோர் தடுப்பூசி போட்டனர். சுகாதாரஆய்வாளர்கள் கிருஷ்ணன், பிரபாகர், விஜயகுமார், பணியாளர் ராகவன், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஆலோசகர் ராஜேஷ், தூய்மை பணியாளர்கள் தங்கப்பாண்டி, மகாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 500 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
Related Tags :
Next Story