கோவில், கடைகளில் திருட்டு
கோவில், கடைகளில் திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்,
மேலூரில் மையப்பகுதியாக உள்ள பேங் ரோடு தெருவில் கடைகளும் வீடுகளும் மிக நெருக்கமாக உள்ளன. இப்பகுதியில் ஒரே நாளில் இரவில் அடுத்தடுத்து 3 இடங்களில் பூட்டை உடைத்து திருடிய துணிகர சம்பவம் நடந்துள்ளது. சக்திமாரியம்மன் கோவிலில் உள்ள சிறிய உண்டியலை உடைத்து 2 ஆயிரம் ரூபாயும், அயோத்தி என்பவரது ஓட்டலின் பூட்டை உடைத்து அங்கு ரூ. 45 ஆயிரத்தையும், அடுத்துள்ள ராஜமாணிக்கம் என்பவரது செல்போன் பழுது பார்க்கும் கடையில் 15 பழைய செல்போன் களையும் திருடர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதையடுத்து மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிச்சை, முத்துக் குமார் உள்பட போலீசார் இந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து திருடர்களை தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story