2 முதியவர்கள் சாவு


2 முதியவர்கள் சாவு
x
தினத்தந்தி 23 Aug 2021 2:38 AM IST (Updated: 23 Aug 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

2 முதியவர்கள் இறந்து கிடந்தனர்.

மதுரை, 
மதுரை மேல ஆவணி மூல வீதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் திலகர் திடல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்து கிடந்த முதியவரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் ஆனையூரை சேர்ந்த முத்துக்குமார் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதேபோல் மதுரை திருப்பாலையை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 68). உறவினர் ஒருவருடைய திருமண அழைப்பிதழில் இவருடைய பெயர் இடம் பெறவில்லை எனத் தெரிய வருகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட பூமிநாதன் வீட்டில்  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story