மாணவி திடீரென இறந்தார்
பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் மாணவி திடீரென இறந்தார்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூர் விநாயகர்கோவில் தெருவில் வசித்து வருபவர் சாரதி (வயது38). கூலி தொழிலாளி. இவரது மகள் அனுஷ்கா (11). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில்அனுஷ்கா வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் அவரது பெற்றோர் மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அனுஷ்காவின் பெற்றோர்வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த அனுஷ்கா திடீரென்று வலிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்த நிலையில் போராடி உள்ளார். அதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்தபோது இறந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தார். இதுதொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story