முதியவரை தாக்கி பணம் பறிக்க முயன்ற வாலிபர்கள்; பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்


முதியவரை தாக்கி பணம் பறிக்க முயன்ற வாலிபர்கள்; பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
x
தினத்தந்தி 23 Aug 2021 11:17 AM IST (Updated: 23 Aug 2021 11:17 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை, சர்வீஸ் சாலையில் கோவூர் அருகே நடந்து சென்ற ஒரு முதியவரை, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர்.

இதை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்ததால் 2 பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்ல முயன்றனர். அந்த வழியாக வாகனங்களில் வந்த சிலர், அவர்களை விரட்டிச்சென்றனர். போரூர் அருகே சென்றபோது இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதையடுத்து அங்கு இருந்தவர்கள், 2 பேரையும் மடக்கி பிடித்து போரூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் பிடிபட்டவர்கள் கெருகம்பாக்கம் லீலாவதி நகரை சேர்ந்த ஹேமந்த் (வயது 20) மற்றும் பிரகாஷ் (24) என்பதும், இருவரும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருவதும் தெரிந்தது. மேலும் இவர்கள், இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்பவர்களை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபடுவதும் தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story