சோழவந்தான் அருகே 366 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
366 கிலோ புகையிலை பறிமுதல்; 4 பேர் கைது
சோழவந்தான்
சோழவந்தான் அருகே 366 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரோந்து பணி
தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. சோழவந்தான் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின்பேரில், சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம் ஆலோசனையின் பேரில் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உள்பட போலீசார் சோழவந்தான் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
4 பேர் கைது
திருவேடகம் முனியாண்டி கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்த முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த அருண்குமார்(வயது 37), எஸ்.மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன்(30), பிள்ளையார்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (33), சோழவந்தான் வட்டபிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(41) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 360 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கூறியதாவது, மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளதாக கூறினார்.
Related Tags :
Next Story