மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி செய்தவர் கைது; 3 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்


மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி செய்தவர் கைது; 3 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்
x
தினத்தந்தி 24 Aug 2021 11:18 AM IST (Updated: 24 Aug 2021 11:18 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு அடுத்த சட்ராஸ், மெய்யூர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். மீனவரான இவருடைய மகன் புகழேந்தி. இவருக்கு மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக கூறி, சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த எம்.எம்.ஆர்.மதன் (வயது 36) என்பவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ரூ.45 லட்சம் வாங்கியதாக தெரிகிறது.

ஆனால் சொன்னபடி அவர், மருத்துவ ‘சீட்’ வாங்கி தராமலும், வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமலும் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் தன்னால் டாக்டருக்கு படிக்க முடியவில்லையே என்ற விரக்தியில் புகழேந்தி, 2018-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவான மதனை கடந்த 3 ஆண்டுகளாக தேடி வந்தனர்.இந்தநிலையில் சென்னை அடையாறில் பதுங்கி இருந்த மதனை, குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.


Next Story