மணிப்பூர் கவர்னராக பதவியேற்க உள்ள நிலையில் காஞ்சி சங்கராச்சாரியாரிடம் இல.கணேசன் ஆசி பெற்றார்
பா.ஜ.க. மூத்த நிர்வாகியும், முன்னாள் தமிழக பா.ஜ.க. தலைவருமான இல.கணேசன், மணிப்பூர் மாநில கவர்னராக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தால் நியமிக்கப்பட்டார்.
அவர் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் சென்று பதவியேற்கவுள்ள நிலையில், காஞ்சீபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள மகாபெரியவர் சுவாமிகள் மணி மண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வரும் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரரை நேற்று சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு சங்கர மடம் சார்பில் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
பின்னர், இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற 27-ந்தேதி மணிப்பூரில் ஆளுநராக பொறுப்பை ஏற்றுக்கொள்ள உள்ளேன். இதற்காக 26-ந்தேதி சென்னையில் இருந்து புறப்படுகிறேன். 52 ஆண்டுகளாக சாதாரண தொண்டனாகவும், அரசாங்க பணியில் இருந்து ராஜினாமா செய்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் முழு நேரமும் பணிபுரிந்த எனக்கு, ஒரு அங்கீகாரம் தரும் வகையில் இந்த பொறுப்பு கிடைத்து இருப்பதாக நான் கருதுகின்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story