மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்


மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 24 Aug 2021 6:44 PM IST (Updated: 24 Aug 2021 6:44 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடந்தது. 

இதில் மாற்றுத்திறனாளிகள் புதிய அடையாள அட்டை பெறவும், புதுப்பிக்கவும் விண்ணப்பித்தனர். மேலும் அவர்களுக்கு சிறப்பு நிபுணர்கள் மூலம் மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. 

முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். 

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இனிவரும் காலங்களில் வாரத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும்’ என்றனர்.

Next Story