டயர் வெடித்ததில் மினிலாரி கவிழ்ந்தது; டிரைவர் படுகாயம்


டயர் வெடித்ததில் மினிலாரி கவிழ்ந்தது; டிரைவர் படுகாயம்
x
தினத்தந்தி 25 Aug 2021 12:08 AM IST (Updated: 25 Aug 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

சத்திரக்குடி அருகே டயர் வெடித்ததில் மினிலாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

போகலூர்,ஆக.25-
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி.. இவர் நேற்று முன்தினம் மாலை மதுரையில் இருந்து சரக்கு ஏற்றி கொண்டு போகலூர் ஒன்றியம் சத்திரக்குடி சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று முன்பக்க டயர் வெடித்ததால் சாலையோரம் மினிலாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் தீபன் சக்கரவர்த்தி படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து சத்திரக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story