கொரோனா நிவாரண நிதி


கொரோனா நிவாரண நிதி
x
தினத்தந்தி 25 Aug 2021 1:33 AM IST (Updated: 25 Aug 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது.

திருமங்கலம், 
கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி உண்ணி பட்டி. இந்த கிராமத்தின் சார்பாக ஊராட்சி தலைவர் சாரதாதேவி செந்தில்குமார் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கொரோனா நிதியாக ரூ. 10 ஆயிரம் வழங்கினார். இந்த தொகையினை கள்ளிக்குடி தாசில்தார் திருமலையிடம் வழங்கப்பட்டது. ஊராட்சி மன்றத்தின் சார்பாக வழங்கப்பட்ட இந்த நிதியைப் பெற்றுக் கொண்ட திருமலை ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு தெரிவித் தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கிராமத்தில் ஏற்கனவே கண்காணிப்பு கேமரா பொருத்துதல், கிராமத்தை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு புது செயல்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சொந்த நிதியில் இருந்து செயல்படுத்தி உள்ளார்.

Next Story