சட்டக்கல்லூரி மாணவர் கைது
சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை,
மதுரை திருப்பாலை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக் டராக பணியாற்றி வருபவர் சண்முகநாதன். நேற்று முன்தினம் இரவு இவர் சூர்யாநகர் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அங்குள்ள மீனாட்சி அம்மன் நகர் பகுதியில் சென்ற போது வாலிபர்கள் 6 பேர் கூட்டமாக நின்று பேசி கொண்டிருப்பதை கண்டார். உடனே அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு சப்-இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார். அதில் ஒருவர் சப்-இன்ஸ்பெக்டரை பணி செய்யவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் திடீரென்று சப்-இன்ஸ்பெக்டர் முகத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் அவரை சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தார். அதில் கடச்சனேந்தல் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (வயது 20), சட்டக்கல்லூரி 3-ம் ஆண்டு மாணவர் என்பது தெரியவந்தது. பின்னர் திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
Related Tags :
Next Story