வாலிபரை கொலை செய்ய முயன்ற 2 பேர் கைது


வாலிபரை கொலை செய்ய முயன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Aug 2021 2:06 AM IST (Updated: 25 Aug 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

வாலிபரை கொலை செய்ய முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை, 
மதுரை சின்னஅனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 21). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தனசேகரபாண்டியன் (22), வேல்பிரதாப் (20), பரசுராமன் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று தனியாக கீரைத்துறை பகுதியில் சென்ற பிரவீன்குமாரை அவர்கள் 3 பேர் சுற்றி வளைத்து தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்ட முயன்றனர். அவர்களிடம் இருந்து பிரவீன்குமார் தப்பி வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் தெரிவித் தார். அவர்கள் கீரைத்துறை போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசேகர பாண்டியன், வேல்பிரதாப் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பரசுராமனை தேடி வருகிறார்கள்.

Next Story