தகராறில் காயம் அடைந்தவர் சாவு


தகராறில் காயம் அடைந்தவர் சாவு
x
தினத்தந்தி 25 Aug 2021 2:18 AM IST (Updated: 25 Aug 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

திருநகரில் தகராறில் காயம் அடைந்தவர் உயிரிழந்தார்.

திருப்பரங்குன்றம், 
மதுரை திருநகர் கலைநகரில் வசித்து வந்தவர் தர்மலிங்கம் (வயது47). இவரது சகோதரர் முத்து (45). இவர்கள் இடையே சம்பவத்தன்று திடீரென்று தகராறு ஏற்பட்டதாக கூறப் படுகிறது. அதில் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொண்டதாக தெரிகிறது. இதில் காயமடைந்த தர்மலிங்கம் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்து போனார். இது தொடர்பாக திருநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story