பெண்களிடம் 10 பவுன் நகை பறிப்பு
மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் பெண்களிடம் 10 பவுன் நகை பறிக்கப்பட்டது.
மதுரை,
மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் பெண்களிடம் 10 பவுன் நகை பறிக்கப்பட்டது.
8 பவுன் நகை
சேலம், அம்மாபேட்டை டி.வி.கே.ரோட்டை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 29). இவர் மனைவியுடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். சம்பவத்தன்று இரவு ராம்குமார், மனைவியுடன் சூர்யா நகரில் உள்ள ஷாப்பிங் மகாலுக்கு சென்றார். அங்கு பொருட்கள் வாங்கி விட்டு வெளியே வந்த போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த வழியாக வந்தனர்.
அவர்கள் திடீரென்று ராம்குமாரின் மனைவி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்து அவர் திருப்பாலை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து பறிப்பு
மதுரை பைக்காரா இ.பி.காலனி விரிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சக்திவேல். இவரது மனைவி கிருஷ்ணவேணி (40). சம்பவத்தன்று இரவு அவர் வீட்டின் கதவை பூட்டி விட்டு படுத்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிசங்கிலியை யாரோ இழுப்பது போன்று தோன்றியது. கண்விழுந்த போது, அவர் அருகே மர்மநபர் ஒருவர் அவரது சங்கிலியை இழுத்து கொண்டிருப்பதை கண்டு சத்தம் போட்டார். அப்போது அருகில் படுத்திருந்த சக்திவேல் எழுந்து அந்த நபரை பிடிக்க முயன்றார். அதற்குள் அந்த நபர் கிருஷ்ணவேணி கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை பறித்து கொண்டு ஓடினார். அவரை விரட்டி கொண்டே சக்திவேல் சென்றார். அதில் மர்மநபரிடம் 2 பவுன் நகையும், இறுக பிடித்துக்கொண்டதில் கிருஷ்ணவேணியிடம் 3 பவுன் நகை அறுந்து கையில் இருந்தது.
விசாரணை
இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நகரில் இரு வேறு சம்பவங்களில் பெண்களிடம் 10 பவுன் நகை பறித்த கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story