வால்பாறையில் கடும் பனிமூட்டம்


வால்பாறையில் கடும் பனிமூட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2021 10:39 PM IST (Updated: 25 Aug 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் கடும் பனிமூட்டம்

வால்பாறை

வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து இருந்தது. இந்த நிலையில்  லேசாக மழை தூறியது. இதன் காரணமாக பகல் நேரத்தில் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. 

இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட முடியாமல் ஆங்காங்கே நிறுத்தினார்கள். பின்னர் பனிமூட்டம் குறைந்ததும் அங்கிருந்து சென்றனர். 

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் நிலவும் பனிமூட்டம்தான் கடும் சவாலாக இருந்து வருகிறது. சாலையில் வெள்ளை கோடுகள் தெரியாததால் சாலை சரியாக தெரிவது இல்லை.

 எனவே சாலையில் வெள்ளை கோடுகள் வரைந்து ஒளிரும் ஸ்டிக்கர் பொறுத்த வேண்டும் என்றனர். 

1 More update

Next Story