பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. மின் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் சி.ஐ.டி.யூ. மின் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
மின் வாரிய கேங்மேன் பயிற்சி காலத்தை 2 ஆண்டில் இருந்து 3 மாதமாக குறைத்திட வேண்டும். கேங்மேன் தொழிலாளர்களை சொந்த மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் சகாயராஜ் தலைமை தாங்கினார்.
இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், சங்கத்தின் திட்ட செயலாளர் ராஜேந்திரன், திட்ட துணைத்தலைவர்கள் சுப்பிரமணியன், ராமசாமி, திட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன், கோட்ட தலைவர்கள் முரளிதரன், மோகனசுந்தரம், கோட்ட செயலாளர் தமிழசன், வீரபாண்டியன், ஒப்பந்த ஊழியர் பிரநிநிதி காரல்மார்க்ஸ், சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story