வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் விநாயகர்
வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் விநாயகர்
அழகர்கோவில்
மதுரை அருகே அழகர்மலை உச்சியில் உள்ள முருகப் பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி பூஜைகள் நடந்தது, இதில் அங்குள்ள வித்தக விநாயகருக்கு அருகம்புல், மல்லிகை, ரோஜா, எருக்கம் பூ உள்ளிட்ட பல்வேறு பூ மாலைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி தரிசனம் செய்தனர். தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் தீபாராதனைகள் நடந்தது. மேலும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும், ஆதிவேல் சன்னதியிலும் வெள்ளி கவச அலங்காரத்தில் மேளதாளம் முழங்க சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. அரசு வழிகாட்டுதல்படி பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
வாடிப்பட்டி பகுதியில் சங்கடஹர சதுர்த்தி விழா விநாயகர் கோவில்களில் நடந்தது. வாடிப்பட்டி வல்லப கணபதி நகரிலுள்ள சித்திரரத வல்லப கணபதிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனைகள் செய்யப்பட்டது. பின்னர் வெள்ளி காப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார். அதேபோல் குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள விநாயகர், குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோவிலிலுள்ள விநாயகர், தாதம்பட்டி நீரேத்தான் இரட்டை பிள்ளையார் கோவிலில் உள்ள வலம்புரிவிநாயகர்களுக்கும் சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதன் ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story