ஆலோசனை கூட்டம்


ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 26 Aug 2021 2:31 AM IST (Updated: 26 Aug 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

வர்த்தகர்கள் நலவாரியம் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் நத்தம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது.

நத்தம்: 

 தமிழ்நாடு வணிகவரித்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வர்த்தகர்கள் நலவாரியம் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம்  நத்தம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. 

கூட்டத்துக்கு செயல் அலுவலர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். வணிகவரித்துறை துணை அலுவலர் ஜேம்ஸ், வர்த்தகர் சங்க தலைவர் சேக்ஒலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் தங்களை உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான படிவங்களை பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் வழங்கினர். இதில் பேரூராட்சி உதவி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story