இளங்கலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது
இளங்கலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது
கோவை
கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை படிப்பு முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
பட்டப்படிப்புகள்
கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம், விலங்கியல், இயற்பியல் மற்றும் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவி யல் உள்பட 21 இளங்கலை பட்டப்படிப்புகள் உள்ளன. இதில் முதலாம் ஆண்டில் 1,433 இடங்கள் உள்ளன.
கோவை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை படிப்பு முதலாம் ஆண்டில் சேர விண்ணப் பங்கள் கடந்த மாதம் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டது.
இதற்காக அரசு கலைக்கல்லூரியில் உதவி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு கல்லூரி பேராசிரியர்கள் உதவியுடன் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்தனர்.
கலந்தாய்வு
இந்த நிலையில் கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந் தாய்வு நேற்று தொடங்கியது.
இதில், முன்னாள் படை வீரர்களின் வாரிசு, தேசிய மாணவர் படையினர், மாற்றுத்திறனாளிகள், விளை யாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டில் சேர கலந்தாய்வு நடைபெற்றது.
அதில் பங்கேற்க வந்த மாணவ- மாணவிகள் வரிசையில் நிற்க வைக் கப்பட்டனர். அவர்கள் கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்து கொண்டனர்.
அந்த மாணவ- மாணவிகளுக்கு கலந்தாய்வு நடைபெற் றது. இன்று (வெள்ளிக்கிழமை) பொதுகலந்தாய்வு தொடங்குகிறது.
இதையடுத்து வருகிற 7-ந் தேதி வரை பாடவாரியாக கலந்தாய்வு நடைபெறுகிறது.
கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்
இது குறித்து கல்லூரி முதல்வர் கூறியதாவது
கோவை அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பில் 1,433 இடங்கள் உள்ளன.
இதற்கு 19 ஆயிரத்து 54 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இடஒதுக்கீடு, மதிப்பெண் அடிப்படையில் மாணவ- மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டு உள்ளனர்.
இதில் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு 6 இடங்களும், விளை யாட்டு வீரர்களுக்கு 43 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 72 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
Related Tags :
Next Story