பெண்ணை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
பெண்ணை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
கோவை
கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பெண்ணை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கள்ளத்தொடர்பு
கோவையை அடுத்த பேரூர் நாதேகவுண்டன்புதூரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 37). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர்.
மாதம்பட்டி அருகே அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் சித்ரா என்ற கல்பனா (35). இவர் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் அவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.
இந்த நிலையில் சித்ரா, நாகராஜிடம் குடும்பத்தை விட்டு பிரிந்து என்னுடன் மட்டும் வாழ வேண்டும் என்று கூறியதாக தெரி கிறது. இதனால் அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
சேலையால் இறுக்கி கொலை
மேலும் நாகராஜிடம் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு சித்ரா கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ், சித்ராவை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி அவர்,கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந் தேதி மாதம்பட்டி லட்சுமி கார்டன் பகுதிக்கு சித்ராவை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
அங்கு அவர்கள் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாகராஜ், சித்ரா அணிந்து இருந்த சேலையால், அவரின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
ஆயுள் தண்டனை
இது குறித்த புகாரின் பேரில் பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். இது குறித்த வழக்கு கோவை மாவட்ட 3-வது கூடுதல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, சித்ராவை கொலை செய்த நாகராஜிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சிவக்குமார் ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story