போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
கோவை
கோவை மாநகரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி கோவை மாநகரில் பணியாற்றும் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாருக்கு மதுக்கரையில் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் ஒவ்வொரு போலீசாரும் 15 ரவுண்டுகள் சுட்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது
போலீசாரின் துப்பாக்கி சுடும் திறனை அறிந்து கொள்ளவும், அதை மேம்படுத்தவும் ஆண்டுதோறும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்படி, போலீசாருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், இன்சாஸ் ரக துப்பாக்கிகள், பழைய கால 303 ஆகிய துப்பாக்கிகளை பயன்படுத்தி சுட பயிற்சி அளிக்கப்பட்டது.
துப்பாக்கி ரகங்களை பொருத்து 200 அடி முதல் 300 அடி தூரம் வரை சுட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இது போல் சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், உதவி கமிஷனர்க ளுக்கு கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் உள்ள துப்பாக்கி சுடும் மையத்தில் பயிற்சி நடைபெற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story