வால்பாறையில் பசுந்தேயிலை துளிர்விட தொடங்கியது


வால்பாறையில் பசுந்தேயிலை துளிர்விட தொடங்கியது
x
தினத்தந்தி 26 Aug 2021 10:55 PM IST (Updated: 26 Aug 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் பசுந்தேயிலை துளிர்விட தொடங்கியது

வால்பாறை

மலைப்பிரதேசமான வால்பாறையில் திரும்பிய இடங்களில் எல்லாமல் தேயிலை தோட்டங்கள் பச்சை பசேலென காட்சியளிக்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தேயிலை தோட்டங்களுக்குள் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள்.

இந்த நிலையில் வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. தற்போது மழை நின்ற நிலையில், அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. 

அத்துடன் வெயிலும் கலந்த காலசூழ்நிலை நிலவி வருவதால் தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை துளிர்விட்டு வளர தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தேயிலை தோட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

 மேலும் பசுந்தேயிலை துளிர்விடுவதை பார்க்க பச்சை பசேலென இருப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளதுடன், தேயிலை தோட்டத்துக்குள் நின்று செல்பி எடுத்து செல்கிறார்கள். 


Next Story