லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 26 Aug 2021 11:01 PM IST (Updated: 26 Aug 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

அதிகபாரம் ஏற்றி வந்த லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி

அதிகபாரம் ஏற்றி வந்த லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

லாரிகள் சிறைபிடிப்பு 

பொள்ளாச்சியை அடுத்த தாளக்கரை வழியாக தினமும் ஏராள மான லாரிகள் சென்று வருகின்றன. இந்த லாரிகள் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி செல்வதால், சாலைகள் சேதமடைந்து வருகின்றன. 

இந்த நிலையில் பொதுமக்கள் இந்த சாலையில் திரண்டு, அந்த வழியாக அதிகபாரம் ஏற்றி வந்த லாரிகளை தடுத்து நிறுத்தினார் கள். பின்னர் அந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப் பட்டது. 

போலீசார் பேச்சுவார்த்தை 

இது குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 

அப்போது பொதுமக்கள் லாரிகள் அதிக பாரம் ஏற்றி செல்வதால் சாலை சேதமாகிறது. மேலும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றனர். 

போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

ரூ.54 ஆயிரம் அபராதம் 

இதற்கிடையில் போலீசார் பிடிபட்ட 4 லாரிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு லாரி மட்டும் கற்களை ஏற்றிக் கொண்டு செல்வது தெரியவந்தது. மற்ற 3 லாரிகளும் காலியாக செல்வதால் அந்த லாரிகளை போலீசார் விடுவித்தனர். 

கற்களை அளவுக்கு அதிகமாக ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து ரூ.54 ஆயிரம் அபராதம் விதித்தனர். 


Next Story