கூலித்தொழிலாளிக்கு 3 ஆண்டு ஜெயில்
கூலித்தொழிலாளிக்கு 3 ஆண்டு ஜெயில்
மதுரை
சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த கூலித் தொழிலாளிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
சிறுமி கடத்தல்
மதுரை செல்லூரை சேர்ந்தவர் முருகன்(வயது 35). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2013-ம் ஆண்டு 9 வயது சிறுமியை கடத்தி, ஒரு நாள் இரவு முழுவதும் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அந்த சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர்.
மறுநாள் காலையில் அவரிடம் இருந்து தப்பிய அந்த சிறுமி, நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறினார்.
3 ஆண்டு ஜெயில்
அதன்பேரில் செல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து முருகனை தேடினர்.அவர் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். 2015-ம் ஆண்டு அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.
முடிவில் முருகன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ராதிகா நேற்று தீர்ப்பளித்தார்.
Related Tags :
Next Story