தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு


தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 27 Aug 2021 1:12 PM IST (Updated: 27 Aug 2021 1:12 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மழை அளவை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 14 செ.மீ. மழை பெய்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story