மாவட்ட செய்திகள்

சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் விவசாயி உள்பட 2 பேர் பலி + "||" + Near Chinnasalem Motorcycle collision kills 2 including farmer

சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் விவசாயி உள்பட 2 பேர் பலி

சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் விவசாயி உள்பட 2 பேர் பலி
சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் விவசாயி உள்பட 2 பேர் பலி
சின்னசேலம்

சின்னசேலம் அருகே தத்தாதிரிபுரம் மேற்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி(வயது 71). விவசாயியான இவர் தனது நிலத்தில் விளைந்த பூக்களை பறித்து அதை விற்பதற்காக சின்னசேலத்தில் உள்ள பூக்கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அதேநேரத்தில் தென்காசிமாவட்டம் வீரகேரளம்புதூர் சாமிநாதன் மகன் சரவணகார்த்திகேயன், சின்னசேலத்தை அடுத்த ராயர்பாளையம் நடுத்தெரு குழந்தைவேல் மகன் அமர்நாத்(22) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சின்னசேலத்தில் இருந்து கூகையூர் நோக்கி வந்து கொண்டிந்தனர். 

தோட்டப்பாடி கிராம எல்லை அருகே வந்தபோது இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதின. இதில் படுகாயம் அடைந்த கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சரவணகார்த்திகேயன், அமர்நாத் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அமர்நாத் பரிதாபமாக இறந்தார். சரவணகார்த்திகேயன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊருணிக்குள் கார் பாய்ந்து 2 பேர் பலி
அலங்காநல்லூர் ஊருணிக்குள் கார் பாய்ந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் இருந்த 3 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
2. வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.
3. கந்திகுப்பம் அருகே விபத்து கார்கள் நேருக்கு நேர் மோதி டிரைவர் உள்பட 2 பேர் பலி 3 பேர் படுகாயம்
கந்திகுப்பம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் திருப்பத்தூரை சேர்ந்த டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் இந்த விபத்தில் பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. முந்திரி ஆலை மேலாளர் உள்பட 2 பேர் பலி
மார்த்தாண்டம் அருகே நடந்த வெவ்வேறு விபத்துகளில் முந்திரி ஆலை மேலாளர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
5. மோட்டார் சைக்கிளில் சென்ற போது மினிலாரி மோதி 2 பேர் பலி
மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது மினி லாரி மோதி பலியானார்கள்.