டிராக்டர் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்


டிராக்டர் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்
x
தினத்தந்தி 27 Aug 2021 11:49 PM IST (Updated: 27 Aug 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

டிராக்டர் மோதி வாலிபர் பலி

சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே வகுத்தெழுவன்பட்டியைச் சேர்ந்தவர் பாலுச்சாமி. இவரது மகன் குமார்(வயது 27). விவசாயியான இவர் நேற்று முன்தினம் சிங்கம்புணரி வாரச்சந்தையில் காய்கறிகளை வாங்கிக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பருவப்பட்டி தூதன் கண்மாய் அருகே வந்தபோது அந்த வழியா வந்த டிராக்டர் மோதியதில் குமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.  மோதிய டிராக்டர் நிற்காமல் சென்று விட்டது. இதுகுறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை ஓட்டி வந்த மதுரை மாவட்டம் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். பலியான குமாரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story